கருப்புக் கவுனி


தமிழகத்தின் பாரம்பரிய அரிசிகள் பல உள்ளன. கருங்குருவை, கருப்புக் கவுனி,குள்ளக்காரர்,சிவப்பு கவுனி,மாப்பிள்ளைச் சம்பா, மிளகுச் சம்பா, இலுப்பைச் சம்பா என்பனவும் அவற்றுள் அடங்குவன. இதில், கருப்புக் கவுனி என்பது ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே சாப்பிட்ட ஓர் அரிசி வகையாக இருந்திருக்கின்றது. ஆனால், இன்றைக்கு கோடை காலத்தில் இயற்கை உணவகங்கள் சிலவற்றில் கருப்புக் கவுனி அரிசியில் செய்யப்பட்ட 'ஐஸ் கிரீம்' ஆகவும் கிடைக்கிறது.
இவ்அரிசி மருத்துவக் குணங்கள் உள்ளடக்கியது.மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு 'இன்சுலின்' சுரப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நோயினையும் கட்டுப்படுத்துகிறது.
மேலும், புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் உடையது.
இயற்கை உணவினைப் போற்றுவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிரேக்க மகா காவியம் இலியட் / ஹோமர் வரலாறு/ Iliad/

கொண்டி மாடு