இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எட்டு

படம்
 #எட்டு_மேல_எட்டு_வச்சு கவிஞர் #சுகமதியான் மிகச் சிறந்த தமிழ் அறிஞர். தமிழின் நிகண்டை வடமொழிச் சொல் என்பாரிடத்தில் அது 'நிகழ்வு' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே என நிரூபித்தவர். அதன் பொருட்டு அவர்க்கு அஞ்சியே எனது இன்னொரு தமிழ் ஆர்வலர் நண்பர் #பார்த்திபன் 'நிகண்டு' எனவெழுதாமல் 'உரிச்சொற் பனுவல்' என்றெழுதுவார் என்பது இருக்கட்டும். நல்லது. அண்மையில், சுகமதியை நேர்கண்டேன் திண்டல் அருகே (தமிழ்க்கடவுள் முருகன் குடிகொண்ட தலங்களில் திண்டலும் ஒன்று). மனிதருக்கு எண்கணித ஜோதிடப் பித்து தலைக்கேறியிருந்தது. பேச்சுக்கு பேச்சு நியூமராலஜி ஆக்ஸிஜனேற்றமாய் கார்பன்டை ஆக்ஸைடை காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார். நானும் எண்கணிதம் பார்ப்பவன் எனினும் அதில் உடன்பாடு இல்லாதவன் - அதிகம் நம்பாதவன். உரையாடலில் "ராஜா, எட்டாம் நம்பர் எனக்கு ஒத்துக்காதுங்க" எனக் கூற எனக்கு 'சொரேல்" என்றது.  "அருந்தமிழை அள்ளிப் பருகி தமிழ்ப்பற்று கொண்டவர்தாமே நீவீர்?" "ஆமாம்.அதற்கென்ன இப்பொழுது?" "தமிழின் முதலெழுத்து அகரம்தானே. அந்த #அ எழுத்து தமிழ் எண்ணாக வருகையில் #8...

கருப்புக் கவுனி

படம்
தமிழகத்தின் பாரம்பரிய அரிசிகள் பல உள்ளன. கருங்குருவை, கருப்புக் கவுனி,குள்ளக்காரர்,சிவப்பு கவுனி,மாப்பிள்ளைச் சம்பா, மிளகுச் சம்பா, இலுப்பைச் சம்பா என்பனவும் அவற்றுள் அடங்குவன. இதில், கருப்புக் கவுனி என்பது ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே சாப்பிட்ட ஓர் அரிசி வகையாக இருந்திருக்கின்றது. ஆனால், இன்றைக்கு கோடை காலத்தில் இயற்கை உணவகங்கள் சிலவற்றில் கருப்புக் கவுனி அரிசியில் செய்யப்பட்ட 'ஐஸ் கிரீம்' ஆகவும் கிடைக்கிறது. இவ்அரிசி மருத்துவக் குணங்கள் உள்ளடக்கியது.மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு 'இன்சுலின்' சுரப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நோயினையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் உடையது. இயற்கை உணவினைப் போற்றுவோம்