இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனக்கணக்கு

படம்
99 ஆல் இரட்டை இலக்க எண்களை எளிதாகப் பெருக்குவது எப்படி? உதாரணமாக, இந்த க/கு கவனியுங்கள். 28*99 = 2772 முதலில் 100ல் இருந்து 28ஐக் கழிக்க 72 வருகிறது. இதனை வலப்புறம் இடுங்கள். பின், 28ல் இருந்து 1ஐக் கழிக்க 27 வருகிறது. இதனை இடப்புறம் இடுங்கள். இப்போது, 2772 எனும் விடை வந்துவிட்டது அல்லவா! நன்றி எனது பள்ளிக்கூட வயது கணக்கு வாத்தியார் #ஜம்புலிங்கம்_சுள்ளிப்பாளையம். அன்புடன், கம்கோராஜா

மணித் தக்காளி

இது கீரை வகையைச் சேர்ந்தது.இதன் பழங்கள் கத்தரிப்பூ நிறத்திலும் கறுப்பு நிறத்திலும் இருக்கும். இக்கீரை குடல் புண்ணை குணப்படுத்தும். இக்கீரை கொங்கு மண்டலம் உள்ளிட்ட கிராமப்புற வட்டார வழக்கில் #கருஞ்சுக்குட்டி கீரை என வழங்கப்படுகிறது. #சுக்குட்டி என்றால் கொங்கு வட்டார வழக்கில் அளவில் சிறியதைக் குறிக்கும். மணத் தக்காளி எனவும் இக்கீரை அழைக்கப்படுகிறது.

வெட்டாப்பு

கிராமப்புற வட்டார வழக்கில், மழை பெய்து ஓய்ந்த பின் வானம் வெண்மையாக இருப்பதை   வெட்டாப்பு விட்டுருச்சு என்பார்கள்.

அடைகாத்தல்

பெட்டைக் கோழிக்குஞ்சு வளர்ந்து பெட்டைக் கோழியான பின் சேவலுடன் அணையும். அதன்பின், நாள்தோறும் ஒவ்வொரு முட்டையாக அதிகபட்சம் 24 முட்டைகளை இடும். அவ்வாறு ஒவ்வொரு நாளும் முட்டையிட்ட பின் வெளியில் வந்து சேவலுடன் அணையும். கோழி வளர்ப்போர் கோழி முட்டையிடுவதை நிறுத்திக் கொண்டதற்கு மறுநாள் முட்டைகளை ஒன்றுகூட்டி ஒரு கூடையில் வைத்து கோழியை அடைகாக்க வைப்பர். முட்டைகளை ஒன்று கூட்டுமுன் கூடையில் சணல் கோணிப்பையை போட்டு, அதன்மேல் மணல் இட்டு அந்த மணல் மத்தியில் கழற்சிக்காய் போன்ற சூட்டுக் கொட்டைகளை வைத்து அதன் பிறகு கோழியை அடைகாக்க விடுவர். முட்டைகள் அனைதத்தும் ஒன்றுவிடாமல் குஞ்சுகளாகப் பொரிக்கப்பட்டு தக்க பருவத்தில் வெளிவரும். இன்னொரு விஷயம், கோழி சேவலை அணையாமல் சிலசமயம் முட்டையிடும். அம்முட்டையிலிருந்து குஞ்சு வராது. அப்படிப்பட்ட முட்டைக்கு 'கூமுட்டை' எனப் பெயர்.

சிந்துபாத்

தினத்தந்தி நாளிதழில் கன்னித்தீவு படக்கதை. சிந்துபாத் கடந்த சில வாரங்களாக குதிரைமுகக் கவசம் அணிந்து மாறுவேடத்தோடு வலம் வருகிறார்.சி.21878 . 11.12.2021 தினத்தந்தி 2ம் பக்கம். இம்முகமூடியில் சிந்துபாத் வருவது இப்படத் தொடருக்கு புதுமையாக இருப்பினும் என் போன்ற தினத்தந்தி கன்னித்தீவு சிந்துபாத் இரசிகர்களுக்கு அவரது முகத்தோற்றத்தை காண இயலாத ஏக்கம் பிறக்கிறது. எப்போது சுயமுகத்தோடு வருவீர் சிந்துபாத். ஏனெனில், 1001 இரவுகளில் வரும் 'கடலோடி' சிந்துபாத்தைவிட நாங்கள் விரும்புவது கன்னித்தீவு சிந்துபாத்தைத்தான்.