ஹோமரின் வரலாறு கிரேக்க நாகரிகம் உலகின் தொன்மையான நாகரீகம் என்பதை அறிவோம். இந்த கிரேக்க நாகரீகத்தை - அதன் வரலாற்றை அறிய முக்கிய ஆதாரமாய் இருப்பவை இலியட், ஒடிஸி என்ற இரண்டு காப்பியங்கள். நமது இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களைப் போன்றவை இவை. இலியட், ஒடிஸி என்ற இரண்டு காப்பியங்களைப் படைத்தவர் ஹோமர் என்ற கிரேக்கத்துப் பாணன் ஆவார். இப்படி ஒருவர் இருந்தாரா என்பதையே சிலர் சந்தேகிக்கின்றனர். அப்படி, இருந்திருக்தாலும், அவர் ஒருவரே இந்தக் காவியங்களை இயற்றவில்லை, நாடோடிப் பாடல்கள் பலவற்றை ஒன்று தொகுத்து ஒரு காவிய உருவம் கொடுத்தார் என்று வேறு சிலர் கருதுகின்றனர், இதுவும் இல்லை, கி.மு. ஆறாவது நூற்றாண்டில், ஏதென்ஸில், அரசாங்கத்தின் உத்தரவுக்கிணங்க, அறிஞர் சிலர் ஒன்று கூடி, முந்திய நூற்றாண்டுகளில் வழங்கி வந்த காவியங்களிலிருந்து சிற்சில பாடல்களை ஒன்றாகத் தொகுத்து, ஹோமரின் பெயரால் இலியத் என்றும் ஒடிஸி என்றும் இரண்டு காவியங்களாக வெளியிட்டனர் என்று இன்னும் ச...
கருத்துகள்
கருத்துரையிடுக