இடுகைகள்

கிரேக்க மகா காவியம் இலியட் / ஹோமர் வரலாறு/ Iliad/

              ஹோமரின் வரலாறு கிரேக்க நாகரிகம் உலகின் தொன்மையான நாகரீகம் என்பதை அறிவோம். இந்த கிரேக்க நாகரீகத்தை - அதன் வரலாற்றை அறிய முக்கிய ஆதாரமாய் இருப்பவை  இலியட், ஒடிஸி என்ற  இரண்டு காப்பியங்கள். நமது இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களைப் போன்றவை இவை.  இலியட், ஒடிஸி  என்ற  இரண்டு காப்பியங்களைப் படைத்தவர்  ஹோமர் என்ற கிரேக்கத்துப் பாணன் ஆவார்.  இப்படி ஒருவர் இருந்‌தாரா என்பதையே சிலர்‌ சந்தேகிக்கின்றனர்‌. அப்படி,  இருந்திருக்தாலும்‌, அவர் ஒருவரே இந்தக்‌ காவியங்‌களை இயற்றவில்லை, நாடோடிப்‌ பாடல்கள்‌ பலவற்றை ஒன்று தொகுத்து ஒரு காவிய உருவம் கொடுத்தார் என்று வேறு சிலர்‌ கருதுகின்றனர்‌,  இதுவும்‌ இல்லை, கி.மு. ஆறாவது நூற்றாண்டில்‌, ஏதென்ஸில்‌, அரசாங்கத்தின்‌ உத்தரவுக்கிணங்க,  அறிஞர்‌ சிலர்‌ ஒன்று கூடி, முந்திய நூற்றாண்டுகளில்‌  வழங்கி வந்த காவியங்களிலிருந்து சிற்சில பாடல்‌களை ஒன்றாகத்‌ தொகுத்து, ஹோமரின்‌ பெயரால்‌ இலியத்‌ என்றும்‌ ஒடிஸி என்றும்‌ இரண்டு காவியங்களாக வெளியிட்டனர்‌ என்று இன்னும்‌ ச...

நார்சிசஸ்

நார்சிசஸ் என்பது ஒரு பூ. நார்சிசஸ் என்பதுஅமரிலிஸ் குடும்பத்தைச் சேர்ந்த,முக்கியமாக வசந்த காலத்தில் பூக்கும் வற்றாத தாவரங்களின் ஒரு இனமாகும் . நார்சிசஸ்  ஒரு கோப்பை அல்லது எக்காள வடிவிலான கரோனாவால் மேலெழுப்பப்பட்ட ஆறு இதழ்கள் போன்ற டெப்பல்களுடன் கூடிய வெளிப்படையான மலர்களைக் கொண்டுள்ளது . மலர்கள் பொதுவாக வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தோட்ட வகைகளில் ஆரஞ்சு அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.    நார்சிசஸ் பண்டைய நாகரிகத்தில் மருத்துவ ரீதியாகவும் தாவரவியல் ரீதியாகவும் நன்கு அறியப்பட்டவர் , நார்சிசஸ் என்ற பெயரின் சரியான தோற்றம் தெரியவில்லை, ஆனால் அது பெரும்பாலும் கிரேக்க வார்த்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. காதலித்த இளைஞர்களின் கட்டுக்கதையின் சில பதிப்புகளில், நார்சிசஸ் இறந்த பிறகு கடவுள்களால் பூவாக மாற்றப்பட்டார் (நன்றி விக்கிபீடியா) ஒ ரு பூவின் கதை நார்சிசஸ் பற்றிய செவிவழிக் கதை இது. இளைஞன் ஒருவன் தினமும் ஓர் ஏரியின் அருகே மண்டியிட்டு அமர்ந்து அந்த ஏரியின் நேரில் தன்னுடைய சொந்த அழகின் பிம்பத்தை உற்றுப் பார்த்து ரசித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தனக...