கிரேக்க மகா காவியம் இலியட் / ஹோமர் வரலாறு/ Iliad/

              ஹோமரின் வரலாறு
கிரேக்க நாகரிகம் உலகின் தொன்மையான நாகரீகம் என்பதை அறிவோம். இந்த கிரேக்க நாகரீகத்தை - அதன் வரலாற்றை அறிய முக்கிய ஆதாரமாய் இருப்பவை இலியட், ஒடிஸி என்ற  இரண்டு காப்பியங்கள். நமது இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களைப் போன்றவை இவை. இலியட், ஒடிஸி என்ற  இரண்டு காப்பியங்களைப் படைத்தவர்  ஹோமர் என்ற கிரேக்கத்துப் பாணன் ஆவார். 
இப்படி ஒருவர் இருந்‌தாரா என்பதையே சிலர்‌ சந்தேகிக்கின்றனர்‌. அப்படி, 
இருந்திருக்தாலும்‌, அவர் ஒருவரே இந்தக்‌ காவியங்‌களை இயற்றவில்லை, நாடோடிப்‌ பாடல்கள்‌ பலவற்றை ஒன்று தொகுத்து ஒரு காவிய உருவம் கொடுத்தார் என்று வேறு சிலர்‌ கருதுகின்றனர்‌, 
இதுவும்‌ இல்லை, கி.மு. ஆறாவது நூற்றாண்டில்‌, ஏதென்ஸில்‌, அரசாங்கத்தின்‌ உத்தரவுக்கிணங்க, 
அறிஞர்‌ சிலர்‌ ஒன்று கூடி, முந்திய நூற்றாண்டுகளில்‌ 
வழங்கி வந்த காவியங்களிலிருந்து சிற்சில பாடல்‌களை ஒன்றாகத்‌ தொகுத்து, ஹோமரின்‌ பெயரால்‌ இலியத்‌ என்றும்‌ ஒடிஸி என்றும்‌ இரண்டு காவியங்களாக வெளியிட்டனர்‌ என்று இன்னும்‌ சிலர்‌ கருதுகின்றனர்.
ஹோமரைப்‌ பற்றி சுருக்கமாகக்‌ கூறுவோம்‌. 
கி.மு. ஒன்பதாவது நூற்‌றாண்டில்‌
கிரீஸின்‌ கிழக்குப்‌ பக்கத்தில்‌ எஜீயன்‌ கடலில்‌
கியோஸ்‌ என்ற தீவில்‌
தான்‌ ஹோமர்‌ பிறந்தார்.  இவன்‌ பிறவிக்‌ குருடன்‌ என்றாலும் இனிய 
குரல்வளம் படைத்தவர். நான்கு தந்திகள்‌ கொண்ட 
தனது இசைக்கருவியுடன்‌, அருமையாகப்‌ பாடிக்‌ 
கொண்டு .ஊர்‌ ஊராகச்‌ செல்வார். சென்ற இடமெல்லாம்‌ இவனுக்குச்‌ சிறப்பு. இவன்‌ எப்படி ஓரிடத்‌ 
தில்‌ வரவேற்கப்பட்டான்‌ என்பதைக்‌ கேளுங்கள்‌ -— 
“ஓட்டுச்‌ சேவகன்‌ இவனைக்‌ கை பிடித்து உள்ளே 
அழைத்துக்கொண்டு போனான்‌. கலைமகள்‌, இவனு 
டைய கண்களைப்‌ பறித்துக்கொண்டு
இனிய குரலைக்‌ கொடுத்திருக்கிறாள்‌. விருந்தினர்‌ 
நடுவில்‌ இவன் ஒரு வெள்ளி நாற்காலியில்‌ ஆமர்த்‌ 
தப்பட்டான்‌. அந்த நாற்காலிக்குப்‌ பின்னாலிருந்த 
தூணில்‌ இவனுடைய வாத்தியத்தைச்‌ சார்த்திவிட்டு, 
அது வைக்கப்பட்டிருப்பதை அவனுடைய கைகளைக்‌ 
கொண்டு தொட்டுக்‌ காட்டினார்கள்‌. இவன்‌ முன்னர்‌ 
ஒரு மேஜையில்‌ ௬வைநிறைந்த ஆகார வகைகள்‌ 
பரிமாறப்பட்டன. பக்கத்தில்‌ ஒரு கோப்பை மதுவும்‌ 
வைக்கப்பட்ட து. போதுமா!!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொண்டி மாடு