அடைகாத்தல்
பெட்டைக் கோழிக்குஞ்சு வளர்ந்து பெட்டைக் கோழியான பின் சேவலுடன் அணையும். அதன்பின், நாள்தோறும் ஒவ்வொரு முட்டையாக அதிகபட்சம் 24 முட்டைகளை இடும். அவ்வாறு ஒவ்வொரு நாளும் முட்டையிட்ட பின் வெளியில் வந்து சேவலுடன் அணையும்.
கோழி வளர்ப்போர் கோழி முட்டையிடுவதை நிறுத்திக் கொண்டதற்கு மறுநாள் முட்டைகளை ஒன்றுகூட்டி ஒரு கூடையில் வைத்து கோழியை அடைகாக்க வைப்பர். முட்டைகளை ஒன்று கூட்டுமுன் கூடையில் சணல் கோணிப்பையை போட்டு, அதன்மேல் மணல் இட்டு அந்த மணல் மத்தியில் கழற்சிக்காய் போன்ற சூட்டுக் கொட்டைகளை வைத்து அதன் பிறகு கோழியை அடைகாக்க விடுவர். முட்டைகள் அனைதத்தும் ஒன்றுவிடாமல் குஞ்சுகளாகப் பொரிக்கப்பட்டு தக்க பருவத்தில் வெளிவரும்.
இன்னொரு விஷயம், கோழி சேவலை அணையாமல் சிலசமயம் முட்டையிடும். அம்முட்டையிலிருந்து குஞ்சு வராது. அப்படிப்பட்ட முட்டைக்கு 'கூமுட்டை' எனப் பெயர்.
Adai kaappathu patri arinthom
பதிலளிநீக்கு